சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் கொலு பொம்மை விற்பனை -அமோக வரவேற்பு!

அக்டோபர் 15 முதல் நவராத்திரி ஆரம்பம்! நவராத்திரியை முன்னிட்டு தமிழகத்தில அனைத்து இடங்களிலும் கொலு பொம்மை விற்கப்படுகின்றன. நவராத்திரி விழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் தெருக்களில் கொலு பொம்மை விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் அனைத்து தெருக்களிலும் கண்ணைக் கவரும் வகையில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.இங்கு பாரம்பரியமான கொலு பொம்மைகள் விற்கப்படும் நிலையில், இந்த முறை புதிதாக சாமி ஊர்வலத்தில் செல்லும் கொலு பொம்மை வகைகளும் ,சிம்மவாகனம் கருட வாகனம் கூடிய சாமி ஊர்வலத்தில் செல்லும் பொம்மை வகைகளும், கள்ளழகர் போன்ற புதுமையான கொலு பொம்மை வகைகளும் இந்த முறை அறிமுகமாகியுள்ளது .இங்கு 5 அடி கடவுள் சிலைகளும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன .

மேலும் விலைக்கேற்றளவில் பொம்மை வகைகளும் விற்கப்படுகின்றன. இந்தக் கொலு பொம்மை வாங்குவதில் பெண்களே அதிக ஆர்வம் காட்டப்படுகின்றனர். என விற்பனையாளர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே களை கட்டிய கொலு பொம்மை விற்பனையால் வியாபாரிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related post

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23 முதல் தொடக்கம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 23…

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 26 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டனிஸ் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது .இந்தப் போட்டிக்கான…
உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம் வரை விற்பனை!

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி ஒரு டிக்கெட் 1.87 லட்சம்…

13ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை நடைபெற உள்ளது. இப்போடியானது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. 13…