சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காவலர் ஆர்ப்பாட்டம்.

சென்னை எழும்பூர்   மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காவலர்  ஆர்ப்பாட்டம்.

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் காவலர் கோதண்டராமன். இவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா வயது 10. இவருக்கு மூன்று வயது இருக்கும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  திரும்பிய பிரதீஷா மீண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமிக்கு ரத்தம் உறைதல் ,ஏற்பட்டு வலது காலும், இடது கையும் செயலிழந்தன. மருத்துவரின் தவறான சிகிச்சையால் தனது மகளுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டது என்று காவலர் கோதண்டராமன். சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் மனம் வேதனை அடைந்த காவலர்  தலைமைச் செயலகத்துக்கு முன்பு  தனதுமகளுடன் ஆர்ப்பாட்டம்  மேற்கொண்டார். காக்கி சட்டையுடன் போராட்டத்தை ஈடுபட்ட தலைமை காவலர் கோதண்டராமனை போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட காவலர் தன் மகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் மிரட்டும் பாணியில் பேசவே,ஆத்திரமடைந்த காவலர் என் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கு காக்கிச்சட்டை தடையாக இருந்தால் இந்த காக்கி சட்டையே எனக்குத் தேவையில்லை என்று ஆதங்கமாகப் பேசினார்,

 

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காவலர் ஆர்ப்பாட்டம்.

சென்னை எழும்பூர்   மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் காவலர்  ஆர்ப்பாட்டம்.
சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் காவலர் கோதண்டராமன். இவர் சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பிரதிக்ஷா வயது 10. இவருக்கு மூன்று வயது இருக்கும் போது சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று  திரும்பிய பிரதீஷா மீண்டும் கடந்த 2021 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிறுமிக்கு ரத்தம் உறைதல் ,ஏற்பட்டு வலது காலும், இடது கையும் செயலிழந்தன. மருத்துவரின் தவறான சிகிச்சையால் தனது மகளுக்கு இவ்வாறு நேர்ந்து விட்டது என்று காவலர் கோதண்டராமன். சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மனம் வேதனை அடைந்த காவலர்  தலைமைச் செயலகத்துக்கு முன்பு  தனதுமகளுடன் ஆர்ப்பாட்டம்  மேற்கொண்டார். காக்கி சட்டையுடன் போராட்டத்தை ஈடுபட்ட தலைமை காவலர் கோதண்டராமனை போலீசார் சமாதானம் செய்ய முயற்சித்தனர். ஆனால், பாதிக்கப்பட்ட காவலர் தன் மகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். போலீசார் மிரட்டும் பாணியில் பேசவே,ஆத்திரமடைந்த காவலர் என் குழந்தைக்கு ஏற்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் அதற்கு காக்கிச்சட்டை தடையாக இருந்தால் இந்த காக்கி சட்டையே எனக்குத் தேவையில்லை என்று ஆதங்கமாகப் பேசினார்,

Related post