சென்னை அணியின் 7ஆவது வெற்றி ! டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

சென்னை அணியின்  7ஆவது வெற்றி !  டெல்லி அணியின் 7ஆவது தோல்வி!

ஐ.பி.எல் தொடரின் 55ஆவது லீக் போட்டியில்  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. ருத்துவும் கான்வேயும் சென்னையின் ஆட்டத்தை துவங்க, கான்வே 10 ரன்களும், ருதுராஜ் 27 ரன்களும் எடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்..அடுத்து களமிறங்கிய ஷிவம் தூபே 3 சிக்சர்களைப் பறக்க விட்டு 25 ரன்கள் எடுத்தார்.அம்பத்தி ராயுடு 23 ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து தோனி 2 சிக்சர்,ஒரு பவுண்டரி என 20 ரன்களைச் சேர்த்து ஆட்டத்தை இழந்தார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை எடுத்தது.

168 ரன்கள்என்ற இலக்கை நோக்கி ஆடிய, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சீசனில் பெற்ற 7 ஆவது அபார வெற்றி இதுவாகும்.

Related post

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

2024 ‌‌ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் போட்டி சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய தினம் சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்…
சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடி வெற்றி!

ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் 16 ஆவது தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கடந்த ஞாயிறு…
ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் போட்டியில் மூன்றாம் இடத்தில் மும்பை அணி!

ஐ.பி.எல் தொடரான 16 ஆவது சீசனில் 54ஆவது போட்டி மும்பை வான்கேடே மைதானத்தில் (மே 9)மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  இடையான போட்டி நடைபெற்றது.…