சென்னை அடையாறு பிரபல கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடல்!

சென்னை அடையாறு பிரபல கிரவுன் பிளாசா ஹோட்டல் மூடல்!

சென்னை அடையாறு பகுதியில் உள்ள பிரபல கிரவுன் பிளாசா ஹோட்டல் வருகிற டிசம்பர் மாதம் 20ஆம் தேதி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 38 ஆண்டுகள் பழமையான இந்த ஓட்டலில் அரசியல் தலைவர்களின் சந்திப்பு,விளையாட்டு வீரர்களின் ஓய்விடம், பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற நிகழ்வுகள் நடைபெறும். தற்போது இந்த கிரவுன் பிளாசா ஹோட்டலை பாஷ்யா ரியல் எஸ்டேட் வாங்கி உள்ளது. இந்த நிலையில் பாஷ்யர் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஓட்டலினை இடித்து விட்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்ட திட்டமிட்டுள்ளது .

இதைத்தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி அதை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக டிசம்பர் 20, 2023 முதல் விருந்தினர்கள் வருகைக்கு எங்கள் கதவுகள் மூடப்படும் என்றும், இதுவரை ஆதரவளித்த வாடிக்கையாளர்களுக்கு நன்றி என்று பிரபல கிராண்ட் பிளாசா ஹோட்டல் தெரிவித்துள்ளது.

Related post