சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி விளையாட்டு அரங்கத்திற்காக மற்றும் ரூ19 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளது. இந்த அரங்கம் தேசிய அளவிலான ஒலிம்பிக் தரத்திலான புதிய செயற்கை இழை மென்மையான தன்மை கொண்ட ஹாக்கி விளையாட்டு அரங்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில்  உள்ள அறைகள் சீரமைக்கப்பட்டு 7500 இருக்கை வசதிகள்  புதிதாக  மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் புதிய மைதானத்தில் ஏழாவது ஆசிய ஆடவர் ஹாக்கி தொடர் 2023 போட்டி வரும் ஆகஸ்ட் (3ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி )வரை நடைபெறுகிறது. ஆசிய கோப்பை ஹாக்கி  தொடரில்  இந்தியா, சீனா ,பாகிஸ்தான் ,மலேசியா, ஜப்பான் ,மற்றும் கொரியா  பல நாடுகளிலிருந்து ஹாக்கி விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஹாக்கி தொடருக்கான டிக்கெட்கள் ராதாகிருஷ்ணன் மேயர் மைதானத்தின்  நுழைவாயில் கவுண்டர்களில் காலை 11 மணி முதல் மாலை 6:00 மணி வரை விற்பனை செய்யப்படுகின்றன.

Related post

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில…