சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி !

சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி !

சென்னையில் ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை!தக்காளியின் விலையேற்றம் காரணமாக கூட்டுறவு சங்க தலைவர் பெரிய கருப்பன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டன. எனினும் தக்காளியின்  விளைச்சல்,  குறைவின் காரணமாக சில்லரை விற்பனை வியாபாரி கடைகளிலும் தக்காளியின் விலை 100, ரூபாயிலிருந்து 120, 130 என விலையேற்றமாக விற்கப்பட்டது. எனவே ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் பெரிய கருப்பன் நாளை முதல் சென்னையில் உள்ள 82 கடைகளிலும் தக்காளி விற்பனை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படியே வட சென்னையில் 32 ரேஷன் கடைகளிலும், மத்திய சென்னையில் 25 ரேஷன் கடைகளிலும், தென் சென்னையில் 25 கடைகளிலும் மொத்தம் 82 நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் . மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் பெரிய கருப்பன்  நாளை முதல் ரூ 60 கொள்முதல் விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என  அமைச்சர் பெரிய கருப்பன்  தெரிவித்தார்.

Related post

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை ஐகோர்ட்டுக்கு 30 நாட்கள் விடுமுறை !

சென்னை உயர் நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மே 1-ஆம் தேதி முதல் ஜூன்-2ஆம் தேதி வரை 30 நாட்கள் எனக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. சென்னை உயர்நீதிமன்ற…
சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி நகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் !

சென்னை தி.நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் சாலை வரை மேம்பால கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளதால்…
சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னையில் 47ஆவது வருட புத்தகக் கண்காட்சி!

சென்னை நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்தில் 47 ஆவது வருட புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் ஜனவரி 3ஆம் தேதி திறந்து வைக்கிறார். தமிழ் ஆங்கில…