சென்னையில் மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா !

சென்னையில் மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா !

சென்னையில் மாமல்லபுரத்தில் பட்டம் விடும் திருவிழா மிக விரைவில்* சென்னையில் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா நடைபெற உள்ளது. முதலில் குஜராத் உள்ளிட்ட நாடுகளில் பட்டம் விடும் விழா நடைபெற்றுள்ளது. தற்போது தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில்  பட்டம் விடும்  திருவிழா நடத்தப்பட உள்ளது. இதுவே தமிழ்நாட்டில் முதல்முறையாக நடத்தப்படும் பட்டம் விடும் திருவிழா .இந்தத் திருவிழா  ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நான்கு நாட்களாக நடைபெற உள்ளது. இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் மலேசியா, வியட்நாம் ,அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற பல நாடுகளிலிருந்து பங்கேற்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் டிராகன் , யானை ,குதிரை, போன்ற வடிவமைப்புகளை கொண்டு பட்டங்கள் பறக்க விடப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. பட்டம் விடும் திருவிழாவில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் கலந்து கொள்ளலாம். எனினும் பெரியவர்களுக்கு மட்டும் 150 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டம் விடும் திருவிழாவில் பட்டம் விடுவதில் பங்கேற்கும் நபர்களுக்கு போட்டிகள் வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் எனப் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது.

Related post