சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு- சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குக் கட்டுப்பாடு- சென்னை காவல்துறை அதிரடி உத்தரவு!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு விதித்து சென்னை காவல்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையில் புத்தாண்டு கொண்டாடப்படும் விதத்தில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 9 மணி முதல் விடியற்காலை வரை நடைபெறும் நிகழ்ச்சிகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த வருட 2024 புத்தாண்டு கொண்டாட்டத்தில் பல அசம்பாவிதங்களைத் தவிர்க்க சென்னை காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. சென்னையில் பெண்களைக் கேலி செய்வதைத் தடுப்பதற்காக பாதுகாப்பு ஊழியர்களை நியமித்துள்ளது . இளைஞர்களிடையே பைக் ரேஸ் நடைபெறுவதைத் தடுப்பதற்காக கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைத்துள்ளது

மேலும் சென்னை நகரம் முழுவதுமே டிசம்பர் 31ஆம் தேதி கொண்டாடப்படும் புத்தாண்டு விழாவிற்காக 15,000 போலீசார்களைப் பாதுகாப்பு பணியிலும், 400 இடங்களில் வாகன தணிக்கைகளும் நடத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது. மேலும் அரசின் விதிமுறைகளை மீறும் ஹோட்டல்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனச் சென்னை காவல்துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

Related post

தனியார் வாகனங்களில ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்குக்  கட்டுப்பாடு!

தனியார் வாகனங்களில ஸ்டிக்கர் ஒட்டுபவர்களுக்குக் கட்டுப்பாடு!

தனியார் வாகனங்களில் நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் ஒட்டுபவர்களுக்கு நபர்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் தலைமைச் செயலகம் டி என் இ…