சென்னையில் அழகிய செம்மொழிப் பூங்கா அற்புத மலர் கண்காட்சி!

சென்னையில் அழகிய செம்மொழிப் பூங்கா அற்புத மலர் கண்காட்சி!

சென்னை செம்மொழி பூங்காவில்  ஜூன் 3 மலர் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.  செம்மொழி பூங்கா சென்னை அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் 8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட தாவரவியல் பூங்காவாகும். செம்மொழி பூங்காவில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு  ஜூன் 3 முதல் 5 தேதி  வரை நடத்தப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செம்மொழிப் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு நல்ல வரவேற்பாக அமைந்தது.  இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நடைபெற உள்ளது. பெங்களூர், உதகை, திண்டுக்கல் ,ஓசூர்,  நீலகிரி மற்றும் கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட மலர் வகைகள் கொண்டுவரப்பட்டு அழகான வடிவமைப்பில் அலங்கரிக்கப்பட்டு மலர் கண்காட்சி நடத்த தோட்ட கலைத்துறை திட்டமிட்டுள்ளது. செம்மொழிப் பூங்காவில் அரியவகை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் இவை” தாவரவியல் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்” எனத் தோட்டக்கலை துறை இயக்குனர் பிருந்தா தேவி அறிக்கையாக வெளியிட்டுள்ளார். மாணவர் மற்றும் சிறியவர்களுக்கு ரூ20 கட்டணமாகவும், பெரியவர்களுக்கு ரூ 50 நுழைவு கட்டணமாகவும் தோட்டக்கலைத்துறை நிர்ணயம் செய்துள்ளது. இந்த மலர் கண்காட்சி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். கோடை விடுமுறை  நீட்டிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சென்னை செம்மொழி பூங்காவிற்கு சென்று கண்டு களித்து மகிழலாம்!

Related post