சென்னையில் பகலில் 40 கிலோ மீட்டர், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக செல்லும் வாகன ஓட்டுனர்களுக்கு வழக்கு பதிவு . சென்னையில் அதிவேகமாக வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனப் பெருநகர காவல் துறை சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார் . சில மாதங்களுக்கு முன்பு, விபத்துக்கள் ஏற்படும் பெரும் நகரமாக சென்னை முதலிடத்தில் இருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அறிக்கையினை வெளியிட்டது. இதனை குறைப்பதற்காக தமிழக அரசு பல நடவடிக்கைகளை முன்னதாகவே கேமராக்கள் மூலம் கொண்டுவரப்பட்டது. தற்போது சென்னை விபத்து ஏற்படுவதை தடுப்பதற்காக போக்குவரத்து போலீசார் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளனர் . சென்னையில் பகலில் 40 மீட்டர் வேகமும், இரவில் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு மேலாக வாகனங்களை ஓட்டினால் ஸ்பீடு ரேடார் கண் தொழில்நுட்பக் கருவி கேமராக்கள் மூலம் தானியங்கி முறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனப் பெருநகர சென்னை காவல்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து பாதுகாப்பிற்காக ரூபாய் 7 கோடி செலவில் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அமைப்புகளைப் பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இதன் மூலம் (ஏ.என்.பி.ஆர்) கேமராக்கள் சென்னை பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டுள்ளன. வாகனங்களை அதிக வேகத்தில் இயக்கினால் தானியங்கி முறையில் கேமராக்களின் பதிவாகும் பதிவெண் பொறுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.