சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் (ஆகஸ்ட் 30) இன்று முதல் தொடங்கி (செப்டம்பர் 1ஆம்) தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகள் 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள், தீவுத்திடலைச் சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை, அண்ணாசாலை, காமராஜர் சாலை, ஈ.வி.ஆர். சாலை, ஆர்.ஏ. மன்றம், முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகு ரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செல்ல தற்காலிகமாகத் தடைசெய்யப்பட்டு சென்னை போக்குவரத்து மற்றும் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஃபார்முலா போர் ரேஸ் பந்தயத்தைப் பொதுமக்கள் இலவசமாக காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் நடிகர் தனுஷ் சென்னை ஃபார்முலா போர் ரேஸ் சென்னை தரம் உயரும் ! அமைச்சர் உதவி செய்த ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் என x தளத்தில் பதிவிட்டுள்ளார்.