சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170ஆவது திரைப்படத்தில் வில்லனாக ராணா டகுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 170ஆவது திரைப்படத்தில் வில்லனாக ராணா டகுபதி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170-ஆவது திரைப்படத்தின் ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார். இந்தத் திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. தற்போது லைக்கா நிறுவனத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி திரைப்படத்திற்கான ஒப்பந்தம் செய்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் மஞ்சு வாரியர், ரித்திகா சிங் போன்ற கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். சூப்பர் ஸ்டாரின் 170ஆவது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தின் தொடக்கப்பணிகள் அக்டோபர் 4ஆம் தேதி திருவனந்தபுரத்தில் தொடங்கயிருப்பதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனவே இத்திரைப்படத்திற்காக செட் போடும் பணி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் பாலிவுட் மிகப்பெரிய நடிகரான அமிதாப் பச்சன் போன்ற நடிகர்களும் நடிக்க உள்ளனர். மேலும் பாகுபலி திரைப்படத்தில் நடித்த ராணா டகுபதி இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாதாகவும் லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.. இவரின் ரானா டகுபதியின் வில்லன் கதாபாத்திரத்திற்காக மாஸான *BGM* ஒன்றினை அனிருத் ரெடி செய்துள்ளார். மேலும் பொழுதுபோக்கு நிறைந்த நல்ல கருத்துள்ள திரைப்படமாக அமையும் என்று நடிகர் சூப்பர் ஸ்டார் தனது அப்டேட்டைத் தெரிவித்துள்ளார்.

Related post

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் !

‌நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகிறார். லைக்கா நிறுவனமானது தான் தயாரிக்கும் திரைப்படத்தின் கதையை ஜேசன் சஞ்சய் இயக்குகிறார் என்ற அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.தற்போது சஞ்சய் ஜேசன் …