சீயான் விக்ரம் பிறந்தநாள் அன்று தங்கலான் படம் மாஸ் வீடியோ வெளியீடு !

சீயான் விக்ரம் பிறந்தநாள் அன்று தங்கலான் படம் மாஸ் வீடியோ வெளியீடு !

சீயான் விக்ரம் பிறந்தநாள் (17.4.2023) அன்று தங்கலான் படம் மாஸ் வீடியோ வெளியீடு. நீண்ட நாட்களாக திரைப்படத்துறையில் பயணித்து கடினப்பட்டு முன்னுக்கு வந்த நடிகர் சீயான் விக்ரம். இவருடைய சேது படத்திற்குப்  பின்னர் காசி, அந்நியன் ,பிதாமகன், தெய்வத்திருமகன் எனப் பல ஹிட்டான படத்தில் அவருடைய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி உள்ளார். இப்படங்களில் அவரின் சிறந்த நடிப்பில் அவருடைய கதாபாத்திரத்தை மக்களுக்கு புரியும் வகையில் அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பாலாவின் பிதாமகன் படத்தில் அவருடைய நடிப்பு திறமையைப் பற்றி சொல்வதற்கு அளவே இல்லை.. தற்போது சியான் விக்ரம் தங்கலான் படத்தினில் நடித்து வருகிறார்.

சியான் விக்ரமனின் பிறந்த நாளான ஏப்ரல் 17 அன்று தங்கலான் படத்தின் மாஸ் வீடியோ படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. தங்கலான் படத்தினை பா .ரஞ்சித் இயக்கியுள்ளார். ஜி.வி பிரகாஷ்  இசையமைத்துள்ளார். தங்கலான் படம்  கே.ஜி.எஃப் கதையை கொண்டு உருவாக்கப்பட்டது.  கே.ஜி.எப் கதையில் மறைக்கப்பட்டவரின் வரலாறு கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பார்வதி மாளவிகா மோகன், பசுபதி போன்றோரும் நடித்துள்ளனர். மேலும் ஹாலிவுட் பிரபலங்களும் நடித்துள்ளனர். தங்கலான் படமானது 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும் இந்த வருடத்தின் கடைசியில் வெளியாக உள்ளது. அது தங்கலான் படமானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post