சீயான்விக்ரமின் துருவநட்சத்திரம் திரைப்படம் மிக விரைவில்!

சீயான்விக்ரமின் துருவநட்சத்திரம் திரைப்படம் மிக விரைவில்!

சீயான் விக்ரமின் துருவ நட்சத்திரம்- யுத்த காண்டமான திரைப்படம்!   விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள துருவ நட்சத்திர திரைப்படம் விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்துக் வர்மா நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ராதிகா சரத்குமார் உள்ளிட்ட இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் மனோஜ் பரமஹம்சா, ஜான், சந்தானகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோர் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளனர். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு செய்துள்ளார். மக்களை கவரும் வகையில் ஹாரிஸ் ஜெயராஜ்   இசையமைத்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திர திரைப்படம் 2018 ஆம் ஆண்டு திரைக்கு வெளியாக இருந்த நிலையில் பல காரணங்களால் திரைக்கு வெளி வருவதில் தாமதம் ஆயிற்று.  ஆறு ஆண்டுகளாக எடுக்கப்பட்ட வரும் துருவ நட்சத்திர திரைப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. இந்திய தமிழ்மொழி உளவு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் (ஜூலை 14) வெளிவர உள்ளது என துருவ நட்சத்திர படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related post

நடிகர்  விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’  திரைப்படம் ரெடி!

நடிகர் விக்ரம் நடிக்கும் ‘சியான் 62’ திரைப்படம் ரெடி!

சித்தா திரைப்பட இயக்குனருடன் நடிகர் விக்ரம் இணைந்துள்ளார்.தங்கலான் திரைப்படத்திற்கு அடுத்ததாக நடிகர் விக்ரமின் சியான் 62 திரைப்படம் உருவாகிறது. இந்தத் திரைப்படத்தைச் சித்தா இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்குகிறார்..…
நடிகர் விக்ரமனின் துருவ நட்சத்திரம்  2ஆவது பாடல் வெளியீடு!

நடிகர் விக்ரமனின் துருவ நட்சத்திரம் 2ஆவது பாடல் வெளியீடு!

நடிகர் விக்ரமனின் துருவ நட்சத்திரம்  2 ஆவது பாடல் வெளியீடு. துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் இரண்டாவது பாடல் இன்று வெளியாகி உள்ளது.நடிகர் விக்ரம் துருவ நட்சத்திர திரைப்படத்தில் நடித்து…