சிறப்பு ஒலிம்பிக் போட்டி ஜூன் 17 முதல் தொடக்கம் !

சிறப்பு ஒலிம்பிக் போட்டி ஜூன் 17 முதல் தொடக்கம் !

சிறப்பு ஒலிம்பிக் போட்டி  மிக விரைவில் தொடங்க இருக்கிறது. ஜெர்மனி நாட்டில் ஜூன் 17ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை சிறப்பு ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் 190 நாடுகளை சேர்ந்த 7000 ஒலிம்பிக் வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஒலிம்பிக் போட்டிகள் 26 பிரிவுகளாக நடைபெற உள்ளது. இந்தியாவிலிருந்து 255 பேர் கொண்ட குழு சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் 198 வீரர்,வீராங்கனைகள் மற்றும் 57  பயிற்சியாளர்கள் சிறப்பு ஒலிம்பிக்  போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். எனவே டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் உள்ள முகாமில் ஜூன் 7 முதல் 11ஆம் தேதி வரை பயிற்சிகள் ஒலிம்பிக் வீரர்களுக்கு அளிக்கப்படுகின்றன.

பின்னர் ஜூன் 12ஆம் தேதி இந்திய குழு ஜெர்மனிக்குப் புறப்பட்டு 16 பிரிவுகளில்  சிறப்பு ஒலிம்பிக்  போட்டியில் பங்கேற்கும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் வீரர்களுக்கு வெள்ளி, தங்கம், வெண்கலப் பதக்கங்கள்  மற்றும் ஊக்கத் தொகைகள்  வழங்கப்படும் என மத்திய விளையாட்டு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related post

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் போட்டி இன்று தொடக்கம்!

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் செஸ் சாம்பியன் போட்டி இன்று தொடக்கம்!

சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சாம்பியன் செஸ் போட்டி 2-ஆவது தொடர் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக சென்னையில் கிராண்ட் மாஸ்டர் சாம்பியன் போட்டி (நவம்பர் 5ஆம்…
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டு அட்டை வழங்குவதற்கான பணி தொடக்கம்!

 தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தில் பயன் பெறுவதற்காக புதிய ரேஷன் கார்டுகளைப் பெற 45,509 விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில மாதங்களாக மகளிர் உரிமைத் தொகை , மிக்ஜாம் புயல் நிவாரணத்…
தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல் தொடக்கம்!

தமிழக அரசின் நீங்கள் நலமா? திட்டம் (மார்ச் 6 )இன்று முதல்…

தமிழக அரசின் ‘நீங்கள் நலமா? திட்டம்’ மார்ச் -6 ஆம் தேதி இன்று முதல் தமிழக முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். இந்தப் புதிய திட்டம் தமிழக மக்களை நேரடியாக…