சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி !

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு   அஞ்சலி !

சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி : சின்ன கலைவாணர் விவேக் 1961ல் கோவில்பட்டியில் பிறந்தார்.ஊட்டியில்  பள்ளி படிப்பையும் அமெரிக்கா கல்லூரியில் பீ.காம் பட்டத்தினையும் பெற்றார். நாடகத்தில் நடித்த வந்த விவேக் நடனத்தையும், மிமிக்ரி  செய்யும் திறனை கண்டு பாலச்சந்தர் அவர்கள் 1987 இல் மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பினை அளித்தார். அதன்பின்னர் 1989இல் புது புது அர்த்தங்கள் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்த அவர் மின்னலே ,பெண்ணின் மனதை தொட்டு, தூள்  போன்ற பல படங்களில் நகைச்சுவை உணர்வுடன் சமூக சீர்திருத்த கருத்துக்களைக் கொடுத்து மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார்.

நடிகர் விவேக் சிறந்த நகைச்சுவை நடிகர்.சினிமாவில் சின்ன கலைவாணர் என்ற பெயரும் பெற்று வந்தார். மரம் நடுங்கள் விவேக் என அப்துல்கலாம் கூறியதைக் கேட்டு பல லட்சம் மரங்களை தமிழ்நாட்டில் நட்டவர்.    2022 ஆம் ஆண்டில் ஏப்ரல் 17 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். தற்போது 17.4.2023 ஆண்டு இரண்டாவது நினைவு அஞ்சலி நாளாகும். சின்ன கலைவாணரான நடிகர் விவேக் நம்மை விட்டு மறைந்தாலும், அவர் நட்டு வைத்த மரங்களும், விட்டுச் சென்ற நகைச்சுவைகளும், சிந்திக்க வைக்கும் சமூக நலன் கருத்துக்களும் நம் மனதில் நீங்காத நினைவுகளில் நிற்கும்.

 

Related post