சிதம்பரம் நடராசர் கோயில் டிச 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் !ஆனந்த தாண்டவம்

சிதம்பரம் நடராசர் கோயில் டிச 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் !ஆனந்த தாண்டவம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிசம்பர் 27ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது. இதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் வரும் டிசம்பர் திங்கட்கிழமை 18ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றுத்துடன் துவக்கப்படவுள்ளது. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளில் சிவபெருமான் ஆனந்த தாண்டவத்தில் திரு நடன காட்சிகளை பதஞ்சலி முனிவருக்கு காட்டி அருளித்தார் .எனவே ஒவ்வொரு வருடமும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் ஆருத்ரா தரிசன‌ம்விழா கொண்டாடப்படுகிறது. 

இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் வரும் டிசம்பர் 27ஆம் உள்ளூர் விடுமுறை அழிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 26 -ல் தேரோட்டம் ,27-ல் தேதி ஆருத்ரா தரிசனத்தை எங்களுக்குத் தொடர்ந்து டிசம்பர் 29ஆம் தேதி தெப்ப உச்சமும், சிறப்பு அபிஷேகங்களும் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.

Related post