சாகித்திய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தமிழர் தேவி பாரதி தேர்வு!.

சாகித்திய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் தமிழர் தேவி பாரதி தேர்வு!.

பிரபல எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருடைய இயற்பெயர் ராஜசேகரன். இவர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடக்கத்தில் எழுத்தாளர் தேவி பாரதி ஆரம்பப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார் . பிறகு தனது 40 வது வயதில் முழு நேரமும், சிறுகதைகளையும் நாவல்களையும் எழுத தொடங்கினார். இவர் நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், நீர்வழி படூ உம் போன்ற நாவல்களை எழுதியவர். இவர் எழுதிய சிறுகதைகளும், நாவல்கள் அனைத்துமே எதார்த்த கதைகளுடன் உணர்வு மிகுந்தவை.

மத்திய அரசு ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கௌரவிக்கும் வண்ணம் சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது.இந்த வருடம் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர் தேவி பாரதி எழுதிய நீர்வழிபடூ உம் மூன்றாவது நாவலுக்கு மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதினை வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

Related post