சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஜிவி பிரகாஷ்!

சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஜிவி பிரகாஷ்!

சமூகத்தின் மீது அக்கறை கொண்டவராக ஜிவி பிரகாஷ் தனது செயல்களை வெளிப்படுத்தி வருகிறார். ஜிவி பிரகாஷ் திரையுலகில் ஒரு சிறந்த இசையமைப்பாளராக உள்ளார். எனினும் ஜல்லிக்கட்டு போராட்டம், நீட் போன்றவற்றிற்கு குரல் கொடுத்து சமூகத்தின் மீது தனது அக்கறையை பதித்து வருகிறார். இந்நிலையில் ஒரு வயதான குழந்தையின் மூளையில் கட்டி ஒன்று இருப்பதால் அதனை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவ தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை ஜிவி பிரகாஷின் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் அந்த குழந்தையின் மருத்துவ உதவிக்காக கோரிக்கை விடுத்துள்ளார். அதை பார்த்த ஜிவி பிரகாஷ் உடனடியாக தனது கூகுள் பே மூலம் 75,000 ரூபாயை தனது ரசிகரிடம் அனுப்பி உதவுமாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஜிவி பிரகாஷின் ரசிகர்கள் அந்த குழந்தை மருத்துவ உதவி செய்து குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related post