சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகம்!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை மகர விளக்கு பூஜை நாட்களில் 80 ஆயிரம் பக்தர்களும் வழக்கமான நேரங்களில் 50,000 பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் மாதங்களான நவம்பர் முதல் ஜனவரி வரை சபரிமலை கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. 

இந் நிலையில் “சபரிமலை வரும் பக்தர்களுக்கு கோயிலின் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், இதற்காக தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் ஐயப்ப பக்தர்களிடம் ரூபாய் 10 ரூபாய் காப்பீட்டுத் திட்டத்திற்காக வசூலிக்கப்படும் எனச் சபரிமலை ஐயப்பன் கோவிலின் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

Related post