‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ லேட்டஸ்ட் அப்டேட்!

‘சந்திரமுகி 2’ ஸ்டேட்டஸ் அப்டேட். சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை பி.வாசு இயக்குகிறார். கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான சந்திரமுகி படம் வெற்றி பெற்று சாதனை படைத்தது. தற்போது உருவாகி வரும் சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  பதிலாக ராகவா லாரன்ஸ்  நடிக்கிறார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிகை ஜோதிகாவுக்குப் பதிலாக பாலிவுட் நடிகையான கங்கணா ராணா நடித்து வருகிறார். சுவாரசியமான நடிப்பில் நகைச்சுவை நடிகர் வடிவேலு இப்படத்தில் நடித்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரமாக ராதிகா நடித்துள்ளார். மேலும் லட்சுமி மேனன், மகிமா, நம்பியார் மற்றும் ரவி மரியா போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர்.லைக்கா புரொடெக்ஷன்  பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இப்படத்தில் கீரவாணி இசையமைத்துள்ளார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவில் தோட்டதரணி கலை இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.  இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் மைசூரில்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சந்திரமுகி 2 படத்தின் ‘லேட்டஸ்ட் ஹாட் அப்டேட்’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் ‘செப்டம்பர் விநாயகர் சதுர்த்தி அன்று ‘சந்திரமுகி 2’ வெளியாகும் எனப் படக் குழுவினர் வலைத்தளங்களில் தெரிவித்துள்ளனர்.

Related post

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு டிஜிபி சங்கர் ஜீவால் புதிய கட்டுப்பாடு !

தமிழகத்தில் வருகிற செப்டம்பர் ஏழாம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப வீடுகளிலும் தெருகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்ய…
ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித் தருவதாக அறிவிப்பு!

சென்னையில் ஏப்ரல் 14ஆம் தேதி ராகவா லாரன்ஸ் அறக்கட்டளையின் சார்பாக மாற்றுத்திறனாளர்களை வைத்து மல்லர் கம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில் ராகவா லாரன்ஸ் பேசிய போது மாற்றுத்திறனாளிகள்…
பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !

பிரபல தொழிலதிபர் முகேஷ்  அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலம் !   பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக நடைபெற்றது.  மும்பையில் உள்ள முகேஷ்…