சதீஷ்கர் மாநிலத்தில் கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர் பலி !

சதீஷ்கர் மாநிலத்தில்  கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர் பலி !

சதீஷ்கர் மாநிலத்தில்  கோர விபத்து கார் மீது லாரி மோதி 11 பேர்   உயிரிழந்து உள்ளனர். சதீஷ்கர் மாநிலம்   சோராம் -பட்கான் கிராமத்தை சேர்ந்த 11 பேர்  மார்கடோலோ கிராமத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று மாலை காரில் புறப்பட்டு சென்றனர்.                        இந்நிலையில்  தேசிய நெடுஞ்சாலை அருகே ஜகத்ரா என்ற கிராமத்தின் வழியே சென்று கொண்டிருக்கும்போது எதிரே வந்த லாரி  கட்டுப்பாட்டை இழந்து கார் மீது வேகமாக மோதியதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

அதில் பயணித்த 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் உருகுலைந்த ஒரு பெண் குழந்தை  கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த  விபத்து குறித்துபோலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை விசாரணை செய்து  தேடி வருகின்றனர். இந்த கோர விபத்து கண்டு சதீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் மிக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துள்ளார்

Related post

ஒடிசா  ரயில் நிலையம் – நெஞ்சை பதற வைக்கும் கோரவிபத்து !

ஒடிசா ரயில் நிலையம் – நெஞ்சை பதற வைக்கும் கோரவிபத்து !

ஒடிசா மாநிலம்  கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் சரக்கு ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து நேரிட்டது. ஒடிசா மாநிலம் பாலசோர்…