கோவையில் intec 2024 வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் துவக்கம்!

கோவையில் intec 2024 வர்த்தகக் கண்காட்சி இன்று முதல் துவக்கம்!

கோவையில் ‘Intec 2024’ வர்த்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியானது கோவையில் ஜூன் 6ஆம் தேதா முதல் ஜூன் 10ஆம்‌ தேதி வரை நடைபெறுகிறது.இந்தக் கண்காட்சியானது தைவான்,ஜெர்மனி ,அமெரிக்கா எனப் பல நாடுகளிலிருந்து முக்கிய நிபுணர்கள் பங்கேற்று சர்வதேசளவில் நடைபெறுகிறது.

இதில் சிறப்பு விருந்தினராக டிவிஎஸ் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் நிர்வாக தலைவர் ஸ்ரீ தினேஷ், கௌரவ விருந்தினர் சி. ஐ. ஐ. சதரன் ரீஜன் தலைவர் டாக்டர். நந்தினி ராமசாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்தக் கண்காட்சியானது “கடந்த ஆண்டை விட 800 கோடி வர்த்தகம் நடைபெறும்” என்று இன்டெக் 2024 தலைவர் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Related post