கோவில்பட்டியில் இன்று முதல் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்!

கோவில்பட்டியில் இன்று முதல் தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தம்!

தமிழகத்தில் கோவில்பட்டி, விருதுநகர், தூத்துக்குடி நெல்லை, தென்காசி போன்ற மாவட்டங்களில் தீப்பெட்டி உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. தொழிற்சாலைகளில் 4 லட்சம் ஏழை, எளிய தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.தற்போது விற்கப்படும் சீன லைட்டர்களால் தீப்பெட்டி விற்பனை குறைந்துள்ளது. மேலும் சீன லைட்டர்கள் 10 ரூபாய்க்கு விற்கப்படுவதால் தீப்பெட்டி சரக்குகள் தேக்கமடைந்துள்ளன. இந்தச் சீன லைட்டர்களால் தீப்பெட்டிகளின் விற்பனை உற்பத்தியும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் பாதிப்படைந்து வருகிறது.

இதனை தீர்வு காண்பதற்காக பிளாஸ்டிக் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக கோவில்பட்டியில் இன்று முதல் 10 நாட்களுக்கு தீப்பெட்டி உற்பத்தி நிறுத்தப்படுகிறது.

Related post