கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கொரோனோ தொற்று நோயால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு கொரோனா வாக்சின் போடப்பட்டது. அப்போது சிலர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறக்க நேரிட்டது. இதனால் கோவிட் வேக்சின் என்பது மாரடைப்புக்கு காரணம் என சிலர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தனர். இதற்கான ஆய்வு பொதுமக்களிடையே போடப்பட்ட தேதியிலிருந்து உடல்நிலை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் படி இந்தியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் கோவிட்-19 தடுப்பூசி ,கோவிட் ஷீல்டு மற்றும் போன்ற தடுப்பூசிகள் மிகவும் பாதுகாப்பானவை எனத் தெரியவந்துள்ளன.
கொரோனா தொற்று நோய்க்கு போடப்பட்டு வந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை எனக் கண்டறியப்பட்டுள்ளன. எனவே கோவிட்- 19 தடுப்பூசிக்கும் மாரடைப்பிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஜிபி பண்ட மருத்துவமனையின் ஆய்வுக்குழு தலைமை டாக்டர் .மோஹித் குப்தா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து Plos One கோவிட் 19 தடுப்பூசிக்கும் போடப்படுவதால் மாரடைப்பு ஏற்படாது என்ற Plos One இதழில் வெளியிடப்பட்டுள்ளது.