கோவாவில் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா கொண்டாட்டம் !

கோவாவில் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா கொண்டாட்டம் !

கோவாவில் 54ஆவது சர்வதேச திரைப்பட விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கோவாவில் நேற்றைய தினம் (நவம்பர் 20 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள்) என 54ஆவது சர்வதேச விழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாவை தகவல் ஒளிபரப்புத்துறை சார்பாக சிறப்பாக நடத்த இந்திய அரசு இந்த வருடம் திட்டமிட்டுள்ளது. இவ்விழாவில் இந்திய தமிழ் , மலையாளம், தெலுங்கு, இந்தி எனப் பல்வேறு மொழிகளில் திரைப்பட நடிகர்கள், திரைப்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், இசை யமைப்பார்கள் எனத் திரைப்படத்துறையில் உள்ள அனைவரும் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் 270 திரைப்படங்கள் திரையிட உள்ளன .இதில் 89 திரைப்படங்கள் இந்திய திரைப்படப் படங்களாக உள்ளன. மேலும் இந்திய திரையுலகில் சிறந்து விளங்குபவர்களுக்கு சர்வதேச விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதைத்தொடர்ந்து கோவாவில் 4 இடங்களில் ஒன்பது நாட்களும் 54ஆவது சர்வதேச விழா கோலாகலமாக தொடங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

Related post