கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்வு

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின்  விலை உயர்வு

கடந்த நான்கு நாட்களாக கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. மகராஷ்டிரா மாநிலம் வெங்காய உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவிலிருந்து வெங்காயம் அனைத்து மாநிலங்களுக்கும் வர வைக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மழை பெய்யாத காரணத்தால் ஜூலை -ஆகஸ்ட் மாதத்தில் வெங்காயம் உற்பத்தி நடைபெறவில்லை. மேலும் கர்நாடக ,ஆந்திரா மத்திய பிரதேசம் மாநிலங்களில் வெங்காயத்தின் உற்பத்தி குறைந்தே உள்ளது . இதனால் தமிழ்நாட்டுக்கு வெங்காயத்தின் வரத்து குறைந்து கொண்டே வருகிறது. எனவே கடந்த நான்கு நாட்களாக கோயம்பேட்டில் சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ70திலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ 80,85 ஆக விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெங்காயம் வாங்குவதில் அவதிப்படுகின்றனர்.இதன் காரணமாக ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையும் விடுத்து வருகின்றனர்.

Related post