கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி!

கொல்கத்தா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.                 ஐ.பி.எல் 16 ஆவது சீசனில் 53ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் இடையேயான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஷிகர் தவான் தலைமையில் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களான பிரப்சிம்ரன் சிங் 12 ரன்கள், லிவிங் ஸ்டன் 15 ரன்கள், ஜித்தேஷ் ஷர்மா 21 ரன்கள், சாம்கரன் 4 ரன்கள் மற்றும் ரிஷி தவான்  19 ரன்களும் எடுத்தனர். ஷாருக்கான் 8 ரன்கள், ஹரி பிரீத் 17 ரன்கள் என ஸ்கோர் செய்த நிலையில் ஷிகர் தவான் ஆட்டத் தொடக்கத்திலிருந்து கடைசிவரை போராடி 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டத்தை இழந்தார். இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைட்ஸ் அணி 180 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கிய நிலையில் குர்பாஸ் 18 ரன்கள், ஜேசன் ராய் 24 ரன்கள், வெங்கடேஷ் ஐயர் 11 ரன்கள் மற்றும் நிதிஷ் ராணா 38 ரன்கள் எடுத்தார். இறுதியாக  கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள்  என்ற இலக்கினை எட்டிப்பிடித்தது.

Related post

3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

3-ஆவது சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணி!

2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 17 ஆவது சீசன் கொல்கத்தா நைட் ரைட்ஸ் மற்றும் சன்ரைஸ் அணிகளிடையே போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்…
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி !

2024 ‌‌ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-ஆவது லீக் போட்டி சென்னை- பஞ்சாப் அணிகளுக்கு இடையே நேற்றைய தினம் சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்றது. இப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப்…
ஐ.பி.எல் தொடரில் 56 ரன்கள் வித்தியாசத்தில்  லக்னோ அபார வெற்றி!

ஐ.பி.எல் தொடரில் 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அபார வெற்றி!

ஐ.பி.எல் 2023 தொடரின் 38-ஆவது போட்டியில் லக்னோவும் பஞ்சாப் அணியும் மோதின. மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, முதலில்…