கொடைக்கானலில் 61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

கொடைக்கானலில்  61ஆவது மலர்க் கண்காட்சி இன்று தொடக்கம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 61ஆவது மலர்க்கண்காட்சி (மே 17 இன்று முதல் மே 26 வரை) நடைபெறுகிறது. இந்த மலர்க்கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்த கிளி, டெடி பியர், மயில், காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட கிங் காங் குரங்கு, டிராகன், பாண்டா கரடி பலவிதமான மலர்கள் வைக்கப்பட்டு அழகாக பூத்துக் குலுங்கி பார்வையாளர்களைக் கவர்ந்து வருகின்றன. 

இந்த மலர்க்கண்காட்சி ‌ கல்லூரி மாணவ, மாணவிகள், உள்ளூர் கலைஞர்கள் மூலம் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு அலங்கார அணி வகுப்பு, கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளன. இந்த மலர் கண்காட்சி இன்று முதல் காலை 8 மணி துவங்கப்பட்டு இரவு 7:30 வரை திறந்திருக்கும் எனத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மலர் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு நுழைவு கட்டணமின்றி அனுமதிக்கப்படுவர் என்பதையும் தெரிவித்துள்ளார்.

Related post

கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

கொடைக்கானலில் படகு போட்டி ஒத்திவைப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா நடைபெற்று வருகிறது. கோடை விழாவில் 61 ஆவது மலர்கண்காட்சியும், பல்வேறு வகையான கலை நிகழ்ச்சிகளும் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தென் மாவட்டங்களான…
ஊட்டி, கொடைக்கானலில்   இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி, கொடைக்கானலில் இ -பாஸ் சேவை அறிமுகம்!

ஊட்டி கொடைக்கானல் சுற்றுலா தலங்களில் இ-பாஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் திண்டுக்கல், நீலகிரி போன்ற மாவட்டங்களில் உள்ள ஊட்டி ,கொடைக்கானலில். சுற்றுலா பயணிகள் அதிகளவில்…