கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி காலமானார்! கேரள மாநிலம் முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை (4.25) மணியளவில் காலமானார். இவரின் வயது 79, தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர்  கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்று இருந்தார். தற்போது பெங்களூரில் சின்மயா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றும் பலனின்றி இன்று உயிரிழந்தார்.  உம்மன் சாண்டிக்கு கேரளாவில் அவரது வீட்டில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா,துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ,காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ,தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கேரளாவின் தற்போதைய முதலமைச்சர் பினராயி விஜயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கேரள முன்னால் முதலமைச்சர் உம்மன் சாண்டி அவர்களின் மறைவின் காரணமாக கேரளாவில் இன்று ஒரு நாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related post

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்!

தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார்! ‘தூரிகைகளின் வேந்தர்’ பிரபல ஓவியர் மாருதி காலமானார். பிரபல ஓவியர் மாருதி புதுக்கோட்டையில் பிறந்தவர். இவருடைய இயற்பெயர் பி.ரங்கநாதன் .…
திரை உலக  இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக இயக்குனர் மனோபாலா இன்று காலமானார்!

திரை உலக  இயக்குனர் மனோபாலா (69வயது) இன்று காலமானார் .  தமிழ் திரைப்பட உலகில் இயக்குனர், நடிகருமான மனோபாலா இன்று (மே 3) உடல் நலக்குறைவால் காலமானார். மனோபாலா…