கேரள மாநிலத்தில் எலி காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. கேரளாவில் இதுவரை 1916 பேருக்கு எலி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு கணக்கெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2024 வருடம் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி எலி காய்ச்சல் நோயால் 121 நபர்கள் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன் காரணமாக கேரளாவில் எலி காய்ச்சலைத் தடுப்பதற்கான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. எனவே அங்குள்ள சுகாதார நிலையங்களுக்குந் தேவையான மருந்து மற்றும் தடுப்பூசிகளை வைத்திருக்க வேண்டும் என அரசு சார்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது.