குழந்தை தொழிலாளர்கள் மீட்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:

குழந்தை தொழிலாளர்கள் மீட்பு- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:

தமிழகத்தில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு:   சென்னை சாந்தோம் ஜெயின்ட் பீட்ஸ் பள்ளியில் 500 இளம் கீபோர்டு இசை கலைஞர்கள் இசைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குழந்தை தொழிலாளர்கள் மீட்பு பற்றிய தகவல்களைத் தெரிவித்தார். கடந்த 2020 ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக  பள்ளிகள் ,கல்லூரிகள் மூடபட்ட நிலையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய எழை, எளிய குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தொழிற்சாலையில் குழந்தைகள் பணியமர்த்தப்பட்டனர். கொரோனா காலகட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் யூனி செஃப் அமைப்பு 160 மில்லியன் அதிகரித்துள்ளனர் என யூனி செஃப் அமைப்பு தெரிவித்தது. இதை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவிலுள்ள மாநிலங்களில 58,289  குழந்தை தொழிலாளர்கள் மீட்கபட்டனர்.

இந்திய மாநிலங்களில் 2ஆவது இடத்தில் தமிழகத்தில் 2,586 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர் என அமைச்சர் தெரிவித்தார். இதனை  தொடர்ந்து “குழந்தைகளுக்கு எதிரான வன்புணர்வு  காரணமாகவும், குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தொடர்பாகவும் 14417 மற்றும் 1028 எண்களுக்க வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தொழிலாளர் நலத்துறை சமூக நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு மேம்படுத்தப்படும்” எனக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 

Related post

சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு!

சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு!

சிக்கிம் பகுதியில் 300 சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவம் மீட்பு.வடக்கு சிக்கிம் பகுதியில் நேற்று இந்திய ராணுவ வீரர்கள்  300  சுற்றுலா பயணிகளைப்  பாதுகாப்பாக மீட்டனர்   .சிக்கிம் பகுதியில் …