குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க பிரதமர் மோடி 2024 பிப்ரவரி மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள கட்டுமான பணிக்கான ஒப்பந்தம் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஏவுதளம் அமைப்பதற்காக 20 கோடியே, 29 லட்சம் மதிப்பில் கட்டுமான பணி மேற்கொள்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப சேவை கட்டணம், ஏவுதள தீயணைப்பு நிலையம், எஸ் எஸ் எல் வி ஏவுதள மையம் ஆகிய பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு அடுத்ததாக தமிழகத்தில் குலசேகரபட்டினத்தில் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் பிரம்மாண்டமாக அமைக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் அமைய உள்ள இந்த ராக்கெட் ஏவுதளத்தை விண்வெளி வீரர்கள் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவரும் வரவேற்கின்றனர்..
