கும்பகோணம் நாகநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கும்பகோணம்  நாகநாதசுவாமி கோயில் திருத்தேரோட்டம் கோலாகலம்!

கும்பகோணம் நாகநாத சுவாமி கோவிலில் திருத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் ஸ்ரீ ராகு பகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி உடன் அருள் பாலிக்கிறார். இத்தளத்தில் ராகு பகவானுக்கு பாலபிஷேகம் செய்தால் ராகு தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஒவ்வொரு வருடமும் கும்பகோணம் நாகநாதசுவாமி கோயிலில் திருக்கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா 11 நாட்களாக மிகச் சிறப்பாக நடைபெறும் .இந்நிலையில் இந்த வருடம் 2023 டிசம்பர் 1-ஆம் தேதி திருக்கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 7ஆம் தேதி திருக்கல்யாணமும் வைபோகமும் மிகச் சிறப்பாக நடைபெற்றது .

மேலும் டிசம்பர் -9ஆம் தேதி இன்று நாகநாதசுவாமி கோயிலில் திருத்தேரோட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இத்தேரோட்டத்தில் சுவாமியே தரிசிக்க வந்த பக்தர்கள் வடம் பிடித்து கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நாகநாத சுவாமி திருதேரோட்டம் பெரு விழா கோலாக்கலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Related post

கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கோலாகலம்!

கும்பகோணம் ராமசாமி கோயிலில் ராமநவமி விழா கோலாகலம்!

தமிழகத்தில் அயோத்தி என்று அழைக்கப்படும் கும்பகோணம் ராமசாமி கோயில் மிகப் புகழ் பெற்ற பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோயிலில் ராம நவமி விழா 11 நாட்கள் மிகச் சிறப்பாக…