குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

குடிசை இல்லா தமிழ்நாடு இலக்கு- சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு (பிப்ரவரி 19)இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கினார் .இந்த நிதிநிலை அறிக்கையில் “அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழகத்தில் ஊரகப்பகுதிகளில் கலைஞரின் கனவு நிறைவேற்றும் வகையில் வரும் 2030 ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்றும், இதன் மூலம் ரூபாய் 3.5 லட்சம் செலவில் ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவரை மீட்க ஆதரவற்றவர்கள், கை பெண்கள், பெற்றோர்களை இழந்தவர்களுக்கான முதலமைச்சரின் தாயுமானர் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.திருச்சி மதுரை, கோவை போன்ற மாநகரங்களில் புதிய தொழில்நுட்ப டைடல் , ஐடிஐ பூங்காக்கள் அமைக்கப்படும் என்றார்.

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிக்காக 12 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5000 நீர் நிலைகளை புனரமைக்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க1000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் ,இதே போல மாணவர்களுக்கான புதல்வன் திட்டமும் செயல்படுத்தப்படும் என்றார்.மேலும் சிங்காரச் சென்னையில் ( 2.0 )என்னும் திட்டத்திற்காக ரூபாய் 500 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசு செய்துள்ளதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Related post

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை பூந்தமல்லியில் பிரம்மாண்டமான திரைப்பட நகரம் அமைக்கப்படும் அமைச்சர் தங்கம் தென்னரசு…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இந்தப் பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதை…
மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம்  நீட்டிப்பு -அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

மின்கட்டணம் செலுத்த டிசம்பர் 18 வரை கால அவகாசம் நீட்டிப்பு -அமைச்சர்…

தமிழ்நாட்டில் மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் டிசம்பர் 18ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மிக்ஜாம்…
டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணை!

டி என் பி சி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் டி என் பி சி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. டிஎன்பிசி தேர்வின் மூலம் 6000 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கப்படும் என…