கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு. தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நாளை (6.9.2023) விடுமுறையைத் தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் 2023 (செப்டம்பர் 6 புதன்கிழமை)கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நன்நாளில் விரதம் இருந்து வழிபடுபவர் கிருஷ்ணரின் அருளை பெறலாம். மேலும் புத்திர பாக்கியம் வேண்டுபவர்கள் விரதம் இருந்து வீட்டில் வழிபட்டால் பிள்ளை பெறுவது உறுதி.
இந்த நாளில் பல கோவில்களில் பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகின்றன . இதைத் தொடர்ந்து கோவில் சார்ந்த இடங்களில் உரியடி உற்சவம், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகள் வைக்கப்பட்டு சிறப்பான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எனவே நாளை கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டுயை தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள், பல அரசு அலுவலகங்களிலும் விடுமுறையைத் தமிழக அரசு அறிவித்துள்ளது.