கால்நடை இளநிலை மருத்துவப் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானதில் அரியலூர் மாணவன் ராகுல் காந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த ராகுல் காந்தி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 582 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். தனது மேற்படிப்பினை தொடருவதற்காக கால்நடை இளநிலை மருத்துவ படிப்பில் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில் கால்நடை இளநிலை படிப்பிற்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது.இந்த தரவரிசை பட்டியலில் ராகுல் காந்தி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.. இதன் காரணமாக அரியலூர் மாணவன் ராகுல் காந்தியைச் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தபோது ராகுல் காந்தி “எம்.பி.பி.எஸ் படிக்க வேண்டும் என்பதே எனது ஆசை ஆனால் என் குடும்பத்தின் வறுமையின் காரணமாக என்னால் படிக்க முடியவில்லை. இதனால் கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்தேன் என்றும் தெரிவித்தார்.
அவரது பேட்டியினைக் கண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மாணவன் ‘ராகுல் காந்தி அவர்களின் கல்வி மீதான ஆர்வம், அவரது உழைப்பும் போற்றத்தக்கது; அவரைப் பாராட்டுகிறேன், நான் வாழ்த்துகிறேன் என்றார். மேலும் படிப்பு நம்முடைய சொத்து, என்றும் நீங்காத புகழ் என்றும், தடைகளைக் கடந்தும் படிப்போம்’ என்றும் தெரிவித்துள்ளார். அரியலூர் மாணவன் ராகுல் காந்தி அவர்களின் பெற்றோருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் ராகுல் காந்தி அவர்களின் கல்வி உதவிக்கு தமிழக அரசு உதவும் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.