காஞ்சிபுரம் மாவட்டம் 1003 முதலீட்டில் மின்சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை!

காஞ்சிபுரம் மாவட்டம் 1003 முதலீட்டில் மின்சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 1003 முதலீட்டில் மின்சாதன கண்ணாடி பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக சென்னை தலைமை செயலகத்தில் பாரத் இன்னோவேட்டிவ் க்ளாஸ் டெக்னாலஜீஸ் பிரைவேட் (Bharat Innovative Glass Technologies Private Limited BIG TECH) நிறுவனம் 1003 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழக முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.. காஞ்சிபுரத்தில் மின்னணு சாதனங்களுக்கான கண்ணாடிப் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவுவதற்கு, தமிழ்நாடு அரசின் முதலீடு ஊக்குவிப்பு முகமையான ‘Guidance’ மற்றும் ‘BIG TECH’ இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் காஞ்சிபுரத்தில் கண்ணாடி உற்பத்தி தொழிற்சாலையால் 840 பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தருவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

Related post