காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம்!

காஞ்சிபுரம் மாவட்டம் விஸ்வரூப பாலமுருகன் கோயில் பால் அபிஷேகம். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலம் பகுதியில் அருள்மிகு விஸ்வரூப பாலமுருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் மூலவரான பாலமுருகன் ‘ஒரே கல்லால் ஆன 40 அடி உயரம் கொண்ட 180 டன் எடையுள்ள சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளார். இந்த விஸ்வரூப பாலமுருகன் திருக்கோயில் ஆண்டுதோறும் வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.                             

இந்த வருடம் நடைபெற்ற வருடாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். ரத்தன கிரி பாலமுருகனடிமை சவாமிகள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.  இந்த விழாவில் 108 பக்தர்கள் கலந்து கொண்டு பால்குடம் எடுத்து விஸ்வரூப பாலமுருகன் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்தனர். இந்தக் கோயிலில் முதலில் 1008 லிட்டர் பால் அபிஷேகம் செய்ய திட்டமிட்டு இருந்த நிலையில்  பக்தர்களின் பங்கிற்கு பால் கொண்டு வந்ததால் 2000 லிட்டர் பாலில் விஸ்வரூப பாலமுருகன் அபிஷேகம் நடந்தது. இதனால் பாலமுருகன் சிலையிலிருந்து நீர்வீழ்ச்சி போல   பாலபிஷேகம்  நடைபெற்றது. இந்த காட்சியை கண்டு பக்தர்கள் ஏராளமானோர் அரோகரா! அரோகரா !என  முழக்கமிட்டனர் வேண்டிக் கொண்டு பத்தி பரவசமடைந்தனர்.

Related post

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் பால் அபிஷேகம் சிறப்பு தரிசனம்! நாமக்கல் மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் உலகப் புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தின் மலைக்கோட்டை…