கள்ளக்குறிச்சி பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

கள்ளக்குறிச்சி பெரியார் நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு. கள்ளக்குறிச்சியில் கல்வராயன் மலையில் பெரியார், மேகம் மற்றும் கவியம் போன்ற நீர்வீழ்ச்சிகள் உள்ளன. கோடை விடுமுறை என்பதால் பொதுமக்கள் அனைவரும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வது வழக்கம். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சுற்று வட்டார பகுதிகளின் பெய்த கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் அடிவாரத்தில் உள்ள பெரியார் அருவியில் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related post