கல்வி விருது வழங்கும் விழா – 10மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கினார்!

கல்வி விருது வழங்கும் விழா – 10மற்றும் 12 ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கினார்!

10மற்றும் 12 ஆம் வகுப்பு  பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு நடிகர் விஜய் பரிசு வழங்கினார். சென்னை நீலாங்கரையில் கல்வி விருது வழங்கும் விழா  கோலாகலமாக (ஜூன் 17)  இன்று நடைபெற்றது.சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரிலில் இந்த கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவர்கள், மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் போது நடிகர் விஜய் அவர்கள் மேடையில் ஏறியதும் மாணவர்கள் உற்சாக வரவேற்புடன் நெகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். நடிகர் விஜய் மாணவ மாணவிகளிடம் பேசிய போது”காமராசர், பெரியார் போன்ற தலைவர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்றும், மேலும் படிப்பு மட்டுமின்றி அனைத்து சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

 தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் சான்றிதழ்கள் நடிகர் விஜய் அவரின் பெற்றோர்  முன்னிலையில் வழங்கினார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600 / 600 மதிப்பெண் பெற்ற நந்தினிக்கு வைர நெக்லஸ் பரிசாக  விஜய் வழங்கினார். பின்னர் மாற்றுத்திறனாளி மாணவிக்கு சிறப்பு பரிசு தொகை வழங்கினார் இதைத்தொடர்ந்து அதிக மதிப்பெண்கள் பெற்ற ஒவ்வொரு  மாணவருக்கும் நடிகர் விஜய் ஊக்குத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். 

Related post

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

தமிழக முழுவதும் 2 கோடி உறுப்பினர்களைச் சேர்க்க இலக்கு -நடிகர் விஜய்

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக் கழகம் எனத் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் .இதை தொடர்ந்து பல அரசியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு…
தமிழக வெற்றி கழகம்-  நடிகர் விஜய் அறிவிப்பு !

தமிழக வெற்றி கழகம்- நடிகர் விஜய் அறிவிப்பு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று தனது அரசியல் கட்சி பெயரை அறிவித்துள்ளார். பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என அரசியலில் செயல்படுவேன்! என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற…
நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT  தலைப்பு!

நடிகர் விஜய்யின் 68 திரைப்படத்திற்கு GOAT தலைப்பு!

நடிகர் விஜய் தனது 68 ஆவது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு 2023 டிசம்பர் 31 தேதியே நடிகர் விஜயின் 68-ஆவது திரைப்படத்தின்…