கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

கலைஞர் மகளிர்உரிமைத் தொகை திட்டம்- 1கோடி இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.காஞ்சிபுரத்தில்  அண்ணா பிறந்த நாளான  செப்டம்பர் 15ஆம் தேதி   இன்று பேரறிஞர் அண்ணா திரு உருவ சிலைக்கு  முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் இன்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தினை தொடங்கி வைத்தார்.  இதைத்தொடர்ந்து மகளிர் உரிமைத்தொகை பெண்களுக்கான  பிரத்தியேக ஏடிஎம் கார்டுகளும் வழங்கப்பட்டன. இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட ஒரு கோடி மகளிர்களுக்கும் இன்று வங்கி கணக்குகளில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.இந்தத் திட்டத்தின் பயனாளார்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.  

மேலும் ஆயிரம் ரூபாய் எவ்வாறு சேமிப்பது என்று உரிமைத்திட்ட   பயனாளி கையேடும் வழங்கப்பட்டு வருகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்  ஏழை, எளிய குடும்பத்தின் பெண்களுக்கான வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் , கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களுக்கான ஒரு அங்கீகாரம்! என்று காஞ்சிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெரிவித்தார்.  எனவே இந்த நாளை  இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன்  கொண்டாடி தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Related post

கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா முதல்வர் தொடங்கி வைக்கிறார்!

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 2-ஆம் கட்ட தொடக்க விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.இந்த விழாவினை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் திறந்து வைக்கிறார்.…