கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு!

கலைஞர் நூற்றாண்டு விழா ஒத்திவைப்பு. ஒரிசா ரயில் விபத்து காரணமாக  நடைபெற இருந்த கலைஞர் நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (ஜூன் 3 )  கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு வட சென்னையில் நடைபெற இருந்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கலைஞர் நூற்றாண்டு விழாவில் தொடக்கப் பொது கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் தி.மு.க தலைமையகம் சார்பாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேறொரு நாளில், தேதி அறிவிக்கப்பட்டு இந்தப் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனத் தி.மு.க தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் கலைஞர் நூற்றாண்டு விழாவை ஒட்டி அண்ணா சாலையில் உள்ள கலைஞரின்  சிலைக்கு மு.க ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து தி.மு.க தொண்டர்கள்  மறைந்த முன்னாள் முதல்வரான கலைஞர் அவர்களின் சிலைக்கு 100 வது பிறந்த நாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினர். தி.மு.க தலைமையகம் சார்பில் இந்த ஒரிசா கோர விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related post

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைப்பு!

தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, தமிழகத்தில் மயிலாடுதுறை,நாகப்பட்டினம், தஞ்சாவூர் திருவாரூர் புதுச்சேரி உள்பட பல்வேறு இடங்களில் கனமழை…
பேனா நினைவுச் சின்னம் வழக்கு  ஜூலை 7 ஆம் ஆம் தேதி  ஒத்திவைப்பு!

பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் ஆம் தேதி…

பேனா நினைவுச் சின்னம் வழக்கு ஜூலை 7 ஆம் தேதி  ஒத்திவைப்பு. சென்னை மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கான தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் மறைந்த…