கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் வண்டலூர் அருகே  அமைக்கபட்டு வருகிறது. சென்னையில் இருந்து  40 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்ட கிளாம்பாக்கத்தில்  சுமார் 67 ஏக்கரில் ரூபாய் .314 கோடி செலவில் பேருந்து நிலையம் இறுதி கட்டமாக நிறைவு பெற்று வருகிறது.  அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள், புறநகர பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் ஆகிய பேருந்துகளை நிறுத்துவதற்கு வசதியாக கிளாம்பக்கத்தில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கோயம்பேடு-கிளம்பாக்கம் மெட்ரோ ரயிலிருந்து 45 நிமிடத்தில் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தினமும் 2500 வெளியூர் பேருந்துகள் வந்து செல்லும் வசதி செய்யப்பட்டுள்ளது. 226 பேருந்துகள் 2,800 பைக்கள் , 3,23 கார்கள் போன்ற வாகனங்களைநிறுத்தும் அளவிற்கு வசதியாய் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் அறுபது சதவீதம் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுவதாக திட்டமிடப்பட்டுள்ளது.. கோயம்பேடு மொத்த விற்பனை, அங்காடி வளாகத்திற்கு இணையாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் கேட்கும் கோரிக்கையின் பொருட்டு கிளாம்பாக்கம் போக்குவரத்து பேருந்து நிலையம்  ஜூன் மாதம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் என்ற பெயரில் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

 

Related post

இரண்டு  ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி உத்தரவு

இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் -தமிழக அரசு அதிரடி…

ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியான ‘மறக்குமா நெஞ்சம்’ ஈசிஆர் சாலை பகுதியில் ஆதித்யா பேலஸில் (செப்டெம்பர் 10தேதி) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது ஈசிஆர் பகுதியில் சாலை போக்குவரத்து ஏற்பட்டது…