கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்நோக்கு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்நோக்கு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!

கலைஞர் நூற்றாண்டு நினைவு பன்நோக்கு மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.  சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கிறார்.  சென்னை கிண்டியில் கிங் ஆய்வக வளாகத்தில் ரூபாய் 230 கோடி மதிப்பில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதது. இந்த மருத்துவமனையில் 1,000 படுக்கை வசதிகள் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் நிறுவும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம் ,சிறுநீரகம், மூளை நரம்பியல் ,ரத்த நாளங்கள், குடல் இறப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்காக சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 15 இன்று 6 மணி அளவில் ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா வேலு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் எம் .எல். ஏக்கள் ‌,எம் .பிக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். இந்த   திறப்பு விழாவிற்காக மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கின்றன.

Related post

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம்  திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் திறப்பு!

சென்னையில் ஹாக்கி விளையாட்டு அரங்கம் முதல்வர் திறப்பு. சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி  விளையாட்டு அரங்கத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்துள்ளார். இந்த ஹாக்கி…
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் ‘தமிழ்நாடு நாள்’ கொண்டாட்டம் !

அனைத்து மாவட்டங்களிலும் ‘ஜூலை 18’ இன்று தமிழ்நாடு நாள்   தினம் கொண்டாடப்படுகிறது.  தமிழ்நாடு தின நாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற சொல்  வெறும்…
மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம் !

மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இலங்கை கடற்பறையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி கடிதம் எழுதியுள்ளார். இந்திய இலங்கை கடல் எல்லை…