கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடக்கம்- அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடக்கம்- அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவிப்பு!

கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுபிரமணியன் அறிவித்துள்ளார். 2018 ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா சுப்பிரமணியன்தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்காக 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ரூபாய் 18000 ஊக்கத்தொகை இனி மூன்று தவணைகளாக வழங்கப்படும் என அறிவிப்பினைஅமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்டுள்ளார் .முதல் குழந்தை, இரண்டாவது குழந்தை என்ற பாகுபாடு இல்லாமல் கர்ப்பிணி பெண்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் , கர்ப்பிணிபெண்களுக்கான உதவித்தொகை தொடர்பாக சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Related post