கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை!

கர்நாடகாவில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழ்நாட்டுக்கு  வருகை. கர்நாடகாவிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையில் 20,000 கன அடி அதிகரித்து தமிழ்நாட்டுக்கு வந்தடைந்துள்ளது.  தென்மேற்கு பருவமழையால் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு, தலைகாவிரி, ஷிமோகா, மைசூர், மாண்டியா போன்ற இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ஹாராங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜா சாகர், கபினி உள்ளிட்ட அணைகளில் அதன் கொள்ளளவை எட்டி வேகமாக நீர் நிரம்பி வருகிறது

இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு திறக்கப்படும் நீரின் அளவு 13983 கன அடியிலிருந்து,17688 கன அடியாக அதிகரித்து இன்று மாலை 20,000 கன அடியாக மேட்டூர் அணையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனால் கர்நாடகா – தமிழ்நாடு எல்லைக்குள் பிலிகுண்டா வழியாக ஒகேனக்கலில் அருவி நீர் நிரம்பி வழிகிறது. மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிகரித்து  வருவதால் தமிழ்நாட்டின் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்!

Related post

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி  மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல்!

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியாவில் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மாநிலங்கள் முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல்கள்…
டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு மூன்றாவது இடம்!

டெல்லியில் நடைபெற்ற 75 ஆவது குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தியில்…

டெல்லியில் 75ஆவது குடியரசு தின விழா ஜனவரி 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.…
6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6 -ஆவது கேலோ இந்தியா போட்டியில் தமிழ்நாடு முதலிடம்!

6- ஆவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் ஜனவரி 19ஆம் தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்திய விளையாட்டு போட்டியானது சென்னை, திருச்சி,…