கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி மாத விழா வெகு விமரிசை!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி மாத விழா வெகு விமரிசை!

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசி மாத விழா 10 நாட்களாக வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது மார்ச் 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், காங்கிரஸ் எம் பி விஜய் வசந்த் போன்றோர் கலந்து கொண்டிருந்தனர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் 10 நாட்கள் மாசி மாத விழா மிக விமர்சையாக நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர். மாசி கொடை விழாவை முன்னிட்டு அம்மாநில பெண்கள் 41 நாளாக பகவதி அம்மனுக்கு பயபக்தியுடன் விரதமிருந்து இருமுடி கட்டி மண்டையோடு பகவதி அம்மனைக் கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

கல்யாண வரம் ,குழந்தை வரம் ,கண் திருஷ்டி பக்தர்கள் வேண்டிக் கொள்கின்றனர். இவ்விழா 10 நாட்களும் காலை, இரவில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வரும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.மார்ச் 12ஆம் தேதி இன்று இரவு 10 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், பெரிய சக்கர தீவட்டி ஊர்வலமும், ஒடுக்குபூஜை நடை பெறுகிறது . இறுதியாக இன்று திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது. எனவே மாசி மாத கொடை விழாவை முன்னிட்டு மார்ச் 12ஆம் தேதி இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related post