கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆலயம் தேரோட்ட விழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆலயம் தேரோட்ட விழா!

கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் -4ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் கோட்டாறு சவேரியா பேராலயம் உள்ளது. உலகப் புகழ்பெற்ற இந்த சவேரியா பேராலயம் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் தளமாகவும் ,மேலும் கேட்டதை வரம் தரும் ஆலயமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 10 நாட்கள் தேரோட்டதிருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் (2023 )கடந்த 24-ஆம் தேதி சவேரியார் ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றப்பட்டது. இதை தொடர்ந்து திருப்புபலி, குணமளிக்கும் திருப்புவலி, சிறப்பு மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

கோட்டாறு சவேரியா ஆலயத்தில் டிசம்பர் 4-ஆம் தேதி திருவிழாவின் முன்னிட்டு தேர் பவனி வரும் .இதனை காண்பதற்காக அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் ஏராளமான வருகின்றனர். இதன் காரணமாக டிசம்பர்- 4ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related post