ககன்யா திட்டத்தின் சோதனை ஓட்டம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி – இஸ்ரோ அறிவிப்பு.

ககன்யா  திட்டத்தின் சோதனை ஓட்டம்  வருகிற அக்டோபர் 21ஆம் தேதி –  இஸ்ரோ அறிவிப்பு.

ககன்யா திட்டத்தின் விண்கலத்தை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் முதல்கட்ட சோதனை அக். 21-இல் நடைபெறும் என மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தள்ளார். விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டமாக ககன்யா திட்டம் இஸ்ரோ கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் ஏவுகணை மையத்தில் வருகிற 21ஆம் தேதி ககன்யா திட்ட சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

மனிதர்களை பூமியிலிருந்து விண்கலத்தில் மூலம் விண்வெளியில் 400 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு சென்று மீண்டும் பூமிக்கு கொண்டு வரும் திட்டமாக உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் வருகிற அக்டோபர் 21ஆம் தேதி காலையில் 7:00 மணி முதல் 9:00 மணிக்கு நடைபெறும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. சந்தியான், ஆதித்யா L1 ஆதித்யா வெற்றிக்கு அடுத்தபடியாக ககன்யா திட்டத்தினை சோதனை ஓட்டத்தினை இஸ்ரோ நிகழ்த்தவுள்ளது.

Related post